உன்னுடன் ஆயிரம் கதை பேசியிருப்பேன்
அதில் எத்தனை அர்த்தமுள்ளவை என்றறியேன்
சில வார்த்தைகளால் உன்னை கேலி செய்திருப்பேன்
அவை உன்னை பாதித்ததா தெரியவில்லை
உன் முகத்தில் புண்ணகை வர சில சமயம் கவி பாடியிருப்பேன்
நிஜமாக ரசித்தாயோ நான் அறியவில்லை
என் கவலைகளை உன்னிடம் பகிர்ந்திருப்பேன்
என்னை சுமையாக நினைத்தாயோ அன்று நான் சிந்திக்கவில்லை
இன் முகம் காட்டும் உன்னிடம்
என் கோபம் காட்டியிருப்பேன்
அப்போது என்னை வெறுத்தாயோ தெரியவில்லை
என்றும் என்னுடன் நட்பு பாராட்டும்
உன்னை பிரியேன் என்று மட்டும் நான் அறிவேன்

No comments:
Post a Comment